Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
இட்லி, தோசைக்கு இப்படி ஒருமுறை வெங்காய சட்னி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Varutha Vengaya Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? தினமும் ஒரே சட்னியை செய்து கொடுக்கவே போரடிக்குதா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் உள்ளதா?
வீட்டில் உள்ளோர் வெங்காய சட்னியை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இன்று சின்ன வெங்காயத்தைக் கொண்டு வறுத்த வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு வறுத்த வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்த வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 20
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு
* நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 கப்
* தேங்காய் - 2 பெரிய சில்லு (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து லேசாக வறுத்து ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, புளி, வேர்க்கடலை சேர்த்து நன்கு
வறுத்துக் கொள்ள வேண்டும்
* பின் அதில் தேங்காய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை
சேர்த்து வதக்கி இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான வறுத்த வெங்காய சட்னி
தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications