Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மட்டன் வாங்குனா இந்த மாதிரி வறுத்து அதுக்கப்புறம் குழம்பு வையுங்க...சூப்பர் சைடிஷா வேற லெவலில் இருக்கும்...!
Varutha Kari Mutton Kulambu Recipe in Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வழக்கமான மட்டன் குழம்பு போல அல்லாமல் இந்த வாரம் வித்தியாசமான சுவையில் மட்டனை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த வாரம் வறுத்த கறி மட்டன் குழம்பை செய்து சாப்பிடுங்கள்.
இந்த வறுத்த கறி மட்டன் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நீங்கள் இந்த வாரம் பிரியாணி செய்தால் அதற்கும் இது செம சைடிஷாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு வறுத்த கறி மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்த கறி மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மட்டன் - அரை கிலோ
- மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
- மல்லி துாள் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
- பொடியாக நறுக்கிய தக்காளி - 1
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- பொட்டு கடலை - 4 ஸ்பூன்
- பட்டை - 2
- கிராம்பு - 5
- கசகசா - 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளரி 10 நிமிடம் மூடி வைக்கவும் .
- பின்னர் கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் ஊற வைத்த கறியை போட்டு நன்கு சிவக்கும் வரை அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வறுத்து எடுத்து வைக்கவும்.
- பின்னர் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லிதூள், தேங்காய், பொட்டு கடலை மற்றும் கசாகசாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன் வறுத்த மட்டன் அரைத்த தேங்காய் கலவை தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- குழம்பு கொதிக்கும் போது நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- பின்பு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறக்ககினால் சுவையான வறுத்த கறி குழம்பு ரெடி.



Click it and Unblock the Notifications
