Latest Updates
-
கிரகப்ரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நகரம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சுவையான... வரமிளகாய் சட்னி
இட்லி, தோசைக்கு பொருத்தமான சைடு டிஷ் என்றால் அது சட்னி தான். அதில் பலரும் விரும்புவது காரமான சட்னி. உங்களுக்கு காரம் அதிகம் இல்லாத, கார சட்னி செய்ய வேண்டுமானால், வரமிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
இட்லி, தோசைக்கு பொருத்தமான சைடு டிஷ் என்றால் அது சட்னி தான். அதில் பலரும் விரும்புவது காரமான சட்னி. உங்களுக்கு காரம் அதிகம் இல்லாத, சுவையான ஒரு கார சட்னி செய்ய வேண்டுமானால், வரமிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு காஷ்மீரி மிளகாய் பயன்படுத்தினால், நல்ல சிவப்பு நிறத்துடன் கண்களைக் கவரும் வண்ணத்துடனும், மிதமான காரத்துடனும் இருக்கும்.

இப்போது வரமிளகாய் சட்னியின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* தக்காளி - 1
* வரமிளகாய் - 2
* காஷ்மீரி மிளகாய் - 2
* புளி - 1 சிறு துண்டு
* கல் உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய மிளகாய் விழுதை சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வையுங்கள்.
* சட்னியில் இருந்து பச்சை வாசனை போனதும், மீண்டும் ஒரு 3-5 நிமிடம் எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் வரை வேக வைத்து இறக்கினால், வரமிளகாய் சட்னி தயார்.
குறிப்பு:
* நீங்கள் வேண்டுமானால், இந்த சட்னிக்கு சாதாரண வரமிளகாயைப் பயன்படுத்தலாம். ஆனால் காஷ்மீரி வரமிளகாயை பயன்படுத்தினால், நல்ல சிவப்பு நிறம் கிடைப்பதோடு, சட்னியின் காரமும் குறைவாக இருக்கும்.
* இந்த சட்னிக்கு நல்லெண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் இந்த சட்னியின் சுவைக்கு முக்கிய காரணம்.



Click it and Unblock the Notifications
