Latest Updates
-
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நகரம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Varalakshmi Vratham Special Coconut Payasam Recipe In Tamil: செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவியின் அருளைப் பெற பெண்கள் மேற்கொள்ளும் ஒரு விரதம் தான் வரலட்சுமி நோன்பு. பொதுவாக வரலட்சுமி நோன்பு ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதம் கொண்டாடும் தினத்தில் மாறுபாடுகள் உண்டாகும்.
ஆனால் இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பானது ஆடி மாதத்தில் வருகிறது. அதுவும் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 08 ஆம் தேதி வருகிறது. இந்த வரலட்சுமி நோன்பை மேற்கொள்வதன் மூலம் செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், குழந்தைகள், வெற்றி, புகழ் போன்றவை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நோன்பு அன்று வீட்டில் பலவிதமான பாயாசம், வடை போன்ற பலவற்றை செய்து லட்சுமி தேவிக்கு படைத்து வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு அன்று ஸ்பெஷலாக ஒரு பாயாசம் செய்ய நினைத்தால், தேங்காய் பாயாசத்தை செய்யலாம். இந்த பாயாசம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த பாயாசத்தை அடிக்கடி செய்து குடித்து வந்தால், வயிற்றுப் புண்கள் குணமாகும், வயிறு குளிர்ச்சியாக இருக்கும், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். குழந்தைகளுக்கு இந்த பாயாசத்தை அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது.
உங்களுக்கு தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - 2 கப்(1/2 லிட்டர்)+ 1/2 கப்
* முழு தேங்காய் - 1 (துருவியது)
* நைலான் ஜவ்வரிசி - 1/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* துருவிய பாதாம் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு முழு தேங்காயை உடைத்து, அதன் ப்ரௌன் பகுதியை
நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து, பால்
சூடானதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி வேக வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நைலான் ஜவ்வரிசியை சேர்த்து கிளறி, மூடி வைத்து,
ஜவ்வரிசி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, ஜவ்வரிசி வெந்துவிட்டதா என்று பார்க்க
வேண்டும். ஒருவேளை மிகவும் கெட்டியாகிவிட்டால், அதில் கூடுதலாக 1/2
கப் பாலை ஊற்றி கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு கொதி விட
வேண்டும்.
* பின்பு பாயாசத்தை இறக்கிவிட்டு, அதில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து
கிளறி, துருவிய பாதாமை சேர்த்து பிரட்டினால், சுவையான தேங்காய்
பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications
