வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..

Posted By:

Varalakshmi Vratam Special Rava Laddu Recipe In Tamil: இந்த ஆண்டின் வரலட்சுமி விரதம் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வருகிறது. உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் அருளைப் பெற வரலட்சுமி விரதம் இருந்து லட்சுமி தேவிக்கு பூஜைகளை செய்து வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளதா? அப்படியானால் இந்த பூஜையின் போது பலவிதமான பிரசாதங்களை செய்வீர்கள்.

Varalakshmi Vratam Special Recipe How To Make Rava Laddu In 10 Minutes

இந்த ஆண்டு வரலட்சுமி பூஜைக்கு ஸ்பெஷல் பிரசாதம் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு லட்டு பிடிக்குமா? அப்படியானால் ரவா லட்டு செய்யுங்கள். அதுவும் இந்த பக்குவத்தில் ஒருமுறை லட்டு செய்யுங்கள், லட்டு நன்கு மென்மையாக இருக்கும். முக்கியமாக இந்த லட்டு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ரவா லட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ரவா - 1 கப்
* தேங்காய் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* நெய் - 1/4 கப்
* முந்திரி - தேவையான அளவு
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் 1 கப் தேங்காய் மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ரவையுடன் சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஈரப்பதமில்லாத ஜாரில் 3/4 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே நெய்யில் ஊற வைத்துள்ள ரவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ரவையானது நெய்யை நன்கு உறிஞ்சி, உதிரி உதிரியாக வந்ததும், அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஏலக்காய் தூள், பொடித்த சர்க்கரை, உப்பு மற்றும் வறுத்த முந்திரியை சேர்த்து கைகளால் நன்கு கிளறி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால், சுவையான ரவா லட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, August 20, 2026, 14:42 [IST]
Desktop Bottom Promotion