Latest Updates
-
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா?
அடுத்தமுறை வல்லாரை கீரையை இப்படி கடைஞ்சு சாப்பிடுங்க.. செம டேஸ்டியா இருக்கும்...
Vallarai Keerai Kadayal Recipe In Tamil: உங்க குழந்தைங்க படிக்குற மறந்துடுறாங்களா? அப்படின்னா அவங்களுக்கு அடிக்கடி வல்லாரை கீரையை வாங்கி சமைத்து கொடுங்கள். இதுவரை வல்லாரைக் கீரையை நீங்கள் சட்னியாகவோ, பொரியலாகவோ செய்திருக்கலாம்.
ஆனால் அடுத்தமுறை வல்லாரை கீரையை கடைந்து கொடுங்கள். இந்த வல்லாரை கீரை கடையல் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும்.

உங்களுக்கு வல்லாரைக் கீரை கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வல்லாரை கீரை கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வல்லாரை கீரை - 1 பௌல்
* துவரம் பருப்பு - 3/4 கப்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* புளி - 1 எலுமிச்சை அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய்,
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் வல்லாரை கீரையை சுத்தம் செய்து, நீரில் கழுவி, அதையும்
குக்கரில் சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் கீரை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் புளியையும் சேர்த்து
சிறிது நேரம் கழித்து, அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, மத்து கொண்டு கடைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாறும்
வரை வதக்க வேண்டும்.
* வதக்கிய பின், அதை கீரையுடன் சேர்த்து கிளறினால், சுவையான வல்லாரைக்
கீரை கடையல் தயார்.
Image Courtesy: Gramathu Kaimanam



Click it and Unblock the Notifications