Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2 ஸ்பூன் உளுத்தம் பருப்பும், 2 வெங்காயமும் வெச்சு.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்...
Uluntham Paruppu Vengaya Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், சற்று வித்தியாசமான சுவையுடைய சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பும், 2 வெங்காயமும் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த உளுத்தம் பருப்பு வெங்காய சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சத்தானதும் கூட. வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு இந்த சட்னியை அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது. குறிப்பாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமானது என்பதால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பேச்சுலர்கள் இந்த சட்னியை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு உளுத்தம் பருப்பு வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுத்தம் பருப்பு வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 2
* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புளி - சிறிய துண்டு
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய 2 பெரிய
வெங்காயம், 1/2 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, புளி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து துருவிய தேங்காயை 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து வதக்கி இறக்கி,
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சட்னி
மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 கொத்து கறிவேப்பிலை, 1 வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி
இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உளுத்தம் பருப்பு
வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications