Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சன்டே ஸ்பெஷல்: உப்பு மிளகு கறி.. எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. குண்டாசோறு நொடியில் காலியாகும்
Uppu Milagu Kari Recipe In Tamil: என்ன தான் சன்டே விடுமுறையாக இருந்தாலும், இந்த விடுமுறை நாளில் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட சமையலறையில் நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு சமையலறையில் நீண்ட நேரம் இருக்கக்கூடாதா?
சன்டே நாளில் விடுமுறையை நன்கு என்ஜாய் செய்ய வேண்டுமா? அப்படியானால் சிம்பிளாக வாய்க்கு விருந்தளிக்கும் ஒரு ரெசிபியை செய்யுங்கள். அதுவும் மட்டன் வாங்கி உப்பு மிளகு கறி செய்யுங்கள், டேஸ்ட் செமயா இருக்கும். அதுவும் ரசம் வைத்து, இந்த உப்பு மிளகு கறி மட்டும் செய்தாலே போதும், வயிறும் மணமும் நிறைந்துவிடும்.

உங்களுக்கு உப்பு மிளகு கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உப்பு மிளகு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* வரமிளகாய் - 5 (விதைகளை நீக்கிக் கொள்ளவும்)
* காஷ்மீரி மிளகாய் - 2 (விதைகளை நீக்கிக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுடுதண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை
எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் விதைகளை நீக்கிய வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* மட்டனில் இருந்து நீர் வந்ததும், அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி
5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் நல்ல சூடான நீரை 2 கப் ஊற்றி கிளறி, 10 நிமிடம் உயர்
தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான
தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது
மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* 20 நிமிடம் மட்டன் வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் மிளகுத் தூள்
மற்றும் சீரகத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான உப்பு மிளகு
கறி தயார்.



Click it and Unblock the Notifications