Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
சுவையும், சத்தும் நிறைந்த உளுத்தம்பருப்பு சட்னி.. எப்படி செய்றதுன்னு பாருங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்
Ulutham Paruppu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று சுவையான, அதே சமயம் சத்தான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த உளுத்தம் பருப்பு சட்னியை செய்யுங்கள். இந்த உளுத்தம் பருப்பு சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த சட்னியை வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால், அவர்களின் உடல் வலுபெறும்.

உங்களுக்கு உளுத்தம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுத்தம் பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்ய
வேண்டும்.
* பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் வரமிளகாய் சேர்த்து வறுத்து,
அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய், வெங்காயம், தக்காளியை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வறுத்த உளுத்தம் பருப்பை சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உளுத்தம் பருப்பு சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications