Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1/2 உளுந்தும், 1 முட்டையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Ulunthu Pancake: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அதுவும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் 1/2 கப் உளுத்தம் பருப்பு, 1 முட்டையும் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு பேன் கேக் செய்து கொடுங்கள்.
இந்த பேன்கேக் சற்று வித்தியாசமான சுவையில் இருந்தாலும், சத்தானது. இப்படியொரு ஸ்நாக்ஸை உங்கள் பிள்ளைகளுக்கு மற்றும் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த உளுந்து பேன்கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள் வேண்டுமா? கீழே உளுந்து பேன்கேன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1/2 கப் (125 கிராம்)
* முட்டை - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகுத் தூள் - 1/4
* உப்பு - சுவைக்கேற்ப
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து மிக்சர் ஜாரில் ஊற வைத்த உளுத்தம் பருப்பை
சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் நீரைத் தெளித்து, நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் மாவை எடுத்து, அத்துடன் 1
முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பேச்சை மிளகாய்,
துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லியை தூவ வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு, அரிசி
மாவு சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நீரைத் தெளித்து நன்கு போண்டா மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு சிறிய தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய்
ஊற்றி, இரண்டு கரண்டி மாவை ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் மிதமான
தீயில் வேக வைத்து, பின் மூடியைத் திறந்து, திருப்பிப் போட்டு, 1
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான உளுத்தம் பருப்பு பேன் கேக்
தயார்.



Click it and Unblock the Notifications