Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
எலும்பு மற்றும் கருப்பையை வலுவாக்கும் உளுந்தம் பால்.. செய்வது எப்படி-ன்னு தெரியுமா?
Ulunthu Milk Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அடிக்கடி ஏதாவது சத்தான ரெசிபிக்களை செய்து கொடுப்பீர்களா? அதுவும் தற்போது நிறைய பேர் எலும்பு தொடர்பான பிரச்சனைகளால் சிரமப்படுகிறார்கள். மேலும் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் கருப்பை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இப்படி எலும்பு மற்றும் கருப்பை தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் ஒரு அற்புதமான மற்றும் சுவையான பால் தான் உளுத்தம் பால். இந்த பால் செய்வது மிகவும் சுலபம். இந்த பாலை பெண்கள் மட்டுமின்றி, அனைவருமே குடிக்கலாம்.

உங்களுக்கு உளுத்தம் பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுத்தம் பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்
* தண்ணீர் - 5 டம்ளர்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சுக்குத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கருப்பட்டி பாகு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 1/2
செய்முறை:
* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* உளுத்தம் பருப்பு நன்கு ஊறியதும், அதைக் கழுவி, குக்கரில் போட்டு,
அத்துடன் 5 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஓரளவு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி,
உளுத்தம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த உளுத்தம் பருப்பை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி,
அடுப்பில் வைத்து, எடுத்து வைத்துள்ள நீர் முழுவதையும் சேர்த்து
தொடர்ந்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும். மாவானது நன்கு நுரை விட்டு
கொதிக்க ஆரம்பிக்கும். மிகவும் கெட்டியாக இருப்பதை உணர்ந்தால், சிறிது
நீரை ஊற்றி, தொடர்ந்து கிளறி வேக வைக்க வேண்டும். முக்கியமாக
அடிபிடிக்க விடாதீர்கள். இப்படி ஒரு அரை மணிநேரம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இப்போது நுரை அடங்கி, நன்கு நீர் போன்று காணப்படும். இந்நிலையில்
ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் கருப்பட்டி
பாகுவை சுவைக்கேற்ப சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான
உளுந்தம் பால் தயார்.
Image Courtesy: Gomathi's Kitchen



Click it and Unblock the Notifications