Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
1/2 கப் உளுந்து இருந்தா.. ஈவ்னிங் சுடசுட இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 10 நாள் வரை கூட வெச்சு சாப்பிடலாம்...
Ulunthu Murukku Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் 1/2 கப் உளுத்தம் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு ஒரு சூப்பரான முறுக்கு செய்து கொடுங்கள்.
இந்த உளுந்து முறுக்கு 10 நாட்கள் வரை நன்கு மொறுமொறுவென்று இருக்கும். முக்கியமாக இந்த முறுக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த முறுக்கை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். அந்த அளவில் இந்த முறுக்கு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு உளுந்து முறுக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* அரிசி மாவு - 4 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் -1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் 1/2 கப் உளுத்தம் பருப்பை எடுத்து, அதை நீரில்
3-4 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து, 3 கப் நீரை ஊற்றி, குக்கரை
அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை குளிர வைக்க
வேண்டும்.
* பருப்பு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்து, அத்துடன் அரிசி மாவு,
உப்பு, ஓமம், மிளகாய் தூள் சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு
மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் முறுக்கு உழக்கை எடுத்து, அதில் விருப்பமான முறுக்கு அச்சை
வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நிரப்ப வேண்டும்.
* பின்பு அதை முறுக்குகளாக ஒரு துணியில் பிழிந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளைப்
போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான உளுந்து முறுக்கு
தயார்.



Click it and Unblock the Notifications