Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
இட்லி, தோசைக்கு உளுத்தம் பருப்பு வெச்சு இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. டேஸ்ட் அருமையா இருக்கும்...
Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் உளுத்தம் பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு சட்னியை செய்யுங்கள். இந்த உளுந்து சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
உங்களுக்கு உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* மஞ்சள் தூள் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மல்லி, பூண்டு, வரமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு
வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வறுத்த பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில் நறுக்கிய தக்காளி, புளி,
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு பச்சை வாசனை
போகும் வரை மென்மையாக வதக்கி இறக்கி, அதையும் குளிர வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து ஓரளவு கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய தக்காளியை சேர்த்து ஓரளவு கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உளுந்து சட்னி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications