Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உடுப்பி ஸ்டைல் குருமா ரெசிபி... தோசை மற்றும் சப்பாத்திக்கு இது அட்டகாசமான சைடிஷாக இருக்கும்... ட்ரை பண்ணுங்க!
Udupi Style Chapati Kurma Recipe in Tamil: சப்பாத்தி, பூரிக்கு ஈஸியான கிரேவி என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது உருளைக்கிழங்கு குருமாதான். ஏனெனில் உருளைக்கிழங்கு குருமா எப்போதும் செய்வதற்கு எளிதானது மற்றும் சுவையானது. ஆனால் நாளடைவில் இது நிச்சயம் போரடித்து விடும். எனவே தோசை, சப்பாத்தி மற்றும் பூரிக்கு வேறு சைடிஷ் தேடிச்செல்வது அவசியம். எனவே நமது பக்கத்து மாநில சைடிஷ்கள் சிலவற்றை முயற்சிக்கலாம்.
கர்நாடகா மற்றும் பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் சப்பாத்தி, பூரிக்கு ஒரு வித்தியாசமான உடுப்பி ஸ்டைல் குருமா பரிமாறப்படும். இந்த உடுப்பி ஸ்டைல் குருமா சப்பாத்தி, பூரி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சைடிஷாக இருக்கும். இதில் மசாலா குறைவாக இருக்கும், மேலும் வீட்டில் எப்போதும் இருக்க்க் கூடிய பொருட்களைக் வைத்தே இதை செய்யலாம். இந்த சூப்பரான சைடிஷை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
மசாலா அரைக்க:
- 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 4 ஏலக்காய்
- 4 கிராம்பு
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு
- 1 டேபிள் ஸ்பூன் பச்சை பயறு
- 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
- 4 காஷ்மீரி மிளகாய்
- 4 வர மிளகாய்
- 1 கப் துருவிய தேங்காய்
தாளிக்க:
- 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
- 1/2 கப் நறுக்கிய கேரட்
- 1/2 கப் பச்சை பட்டாணி
- 1/2 கப் நறுக்கிய உருளைக்கிழங்கு
- 1/2 ஸ்பூன் மஞ்சள்
- 3 ஸ்பூன் புளிச்சாறு
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் வெல்லம்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- ஒரு கடாயை பாத்திரத்தில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கிராம்பு, மிளகு, மிளகாய் மற்றும் மற்றும் பிற மசாலாப் பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
- கடைசியாக தேங்காய் சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வறுத்த மீதமுள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கேரட், பச்சைப் பட்டாணி, வேகவைத்த மற்றும் தோல் நீக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை வறுக்கவும்.
- இந்தக் காய்கறித் துண்டுகளை அரை லிட்டர் தண்ணீரில் மிதமான தீயில் வைத்து, முக்கால் பதம் வேகும் வரை வேக வைக்கவும்.
- இப்போது அரைத்த மசாலா விழுது, மஞ்சள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்க விடவும்.
- பின்னர் புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை வரும் வரை கொதிக்க வைக்கவும்.
- இறுதியாக வெல்லம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சூப்பரான உடுப்பி ஸ்டைல் குருமா ரெடி. இது சப்பாத்தி, பூரி மற்றும் தோசைக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications