உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும்

Posted By:

Udupi Style Kollu Rasam Recipe in Tamil: அனைத்து விருந்துகளிலும் அவசியம் இருக்கும் ஒரு பிரதான உணவென்றால் அது ரசம்தான். எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது ரசம் இல்லாமல் முழுமையடையாது. உங்கள் வீட்டில் அடிக்கடி ரசம் செய்வீர்களா? தக்காளி ரசம், பருப்பு ரசம் மற்றும் மிளகு ரசம் என வழக்கமான ரசம் செய்து போரடித்து விட்டதா? அப்படியென்றால் இந்த உடுப்பி ஸ்டைல் குதிரைவாலி ரசத்தை ஒருதடவை முயற்சி செய்து பாருங்கள்.

Udupi Style Kollu Rasam Recipe How to Make at Home in Tamil

இந்த உடுப்பி குதிரைவாலி ரசம் எவ்வளவு சுவையானதோ அதேயளவிற்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த குதிரைவாலி ரசம் செரிமானப் பிரச்சினைகள்,உடல் சோர்வு, சளி போன்ற பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் இந்த ரசத்தை தங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ரசத்தை செய்வது மிகவும் எளிதானதும் கூட.

உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் குதிரைவாலி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி குதிரைவாலி ரச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேகவைக்கத் தேவையானவை:

- 1 கப் கொள்ளு
- ½ ஸ்பூன் மஞ்சள்
- 1 ஸ்பூன் உப்பு
- 5 கப் தண்ணீர்

மசாலா விழுது அரைக்கத் தேவையானவை:

- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் மல்லி விதைகள்
- ½ ஸ்பூன் சீரகம்
- ¼ தேக்கரண்டி வெந்தயம்
- 5 வர மிளகாய்
- ½ கப் துருவிய தேங்காய்
- ½ கப் வேகவைத்த கொள்ளு
- 1 பல் பூண்டு

ரசம் வைக்க:

- 1 கப் புளிக்கரைசல்
- 2 ஸ்பூன் வெல்லம்
- 3 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் உப்பு

தாளிக்க:

- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 8 பல் பூண்டு, நறுக்கியது
- 1 ஸ்பூன் கடுகு
- 1 வர மிளகாய், உடைத்தது
- சிறிது கறிவேப்பிலை

செய்முறை:

- முதலில், ஒரு பிரஷர் குக்கரில் 1 கப் கொள்ளு, ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 5 கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- குக்கரை மூடி, 8 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

- பின்னர் கொள்ளு வேகவைத்த நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

- மசாலா விழுதை அரைக்க, ஒரு வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் 1 ஸ்பூன் மல்லி விதைகள், ½ ஸ்பூன் சீரகம், ¼ ஸ்பூன் வெந்தயம் மற்றும் 5 காய்ந்த மிளகாயைச் சேர்க்கவும்.

- இதை வாசனை வரும் வரை குறைந்த தீயில் வதக்கவும். இதை நன்கு ஆறவைத்து மிக்சி ஜாருக்கு மாற்றவும்.

- அத்துடன் ½ கப் தேங்காய், ½ கப் வேகவைத்த கொள்ளு மற்றும் 1 பல் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு பெரிய பாத்திரத்தில் கொள்ளு வேகவைத்த நீரை ஊற்றவும். அதில் 1 கப் புளிக்கரைசல், 2 ஸ்பூன் வெல்லம், 3 பச்சை மிளகாய், ½ ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது கறிவேப்பிலை மற்றும் 1 உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- நன்றாகக் கலந்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

- தயார் செய்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, கலவையின் பதத்திற்கு ஏற்ப சரிசெய்து நன்றாகக் கலக்கவும்.

- மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

- ரசத்தை தாளிக்க, 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும்.

- 8 பல் நசுக்கிய பூண்டு சேர்த்து, அவை நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.

- அதன்பின் 1 ஸ்பூன் கடுகு, 1 வர மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு பொரியும் வரை காத்திருக்கவும்.

- தாளிப்பை ரசத்தின் மீது ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 14, 2026, 22:15 [IST]
Desktop Bottom Promotion