Latest Updates
-
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
சப்பாத்தி, சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்... உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு
Udupi Style Ash Gourd Coconut Curry Recipe: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு ஈஸியான, அதே சமயம் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெள்ளை பூசணி உள்ளதா? அப்படியானால் கர்நாடகா உடுப்பி ஸ்டைலில் வெள்ளை பூசணி குழம்பு செய்யுங்கள்.
இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை பூசணி - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு - 1 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் வெள்ளை பூசணியை குக்கரில் போட்டு, அதில் சிறிது நீரை
ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி கிளறி, 1
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை சுடுநீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை
பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், வெந்தயம்,
சீரகம், மல்லி, எள்ளு விதைகள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய், வெல்லத்தை
சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
தேங்காய் விழுதை சேர்த்து, புளி நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக
கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதை
அப்படியே தயாரித்து வைத்துள்ள குழம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான
உடுப்பி ஸ்டைல் வெள்ளைப் பூசணி குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications