Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உடுப்பி ஹோட்டல் ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க...
Udupi Hotel Neer Chutney Recipe In Tamil: காலை உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? இட்லி பெரும்பாலும் சட்னி தான் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் தேங்காய் சட்னி ரொம்ப பிடிக்குமா?
அப்படியானால் அடுத்தமுறை இட்லிக்கு உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி நன்கு காரமாகவும், நீர் போன்றும் இருக்கும். இப்படி சட்னியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் இந்த சட்னி ருசியாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த சட்னியை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 6
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* இஞ்சி - 1/2 இன்ச்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் துருவிய
தேங்காய், இஞ்சி, புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லியை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை சேர்த்து, அத்துடன் 1 கப்
நீரை ஊற்றி, நன்கு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தண்ணி
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications