Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தேங்காயோட இந்த பொருட்களை சேர்த்து உடுப்பி ஸ்டைலில் தேங்காய் சட்னி அரைச்சு பாருங்க... செமயா இருக்கும்...!
Udupi Coconut Chutney Recipe in Tamil: தினமும் காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசைதான் செய்கிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? இட்லி அல்லது தோசைக்கு பொதுவாக சட்னி தான் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் தேங்காய் சட்னி ரொம்ப பிடிக்குமா?
அப்படியானால் அடுத்தமுறை இட்லிக்கு உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி வழக்கமான தேங்காய் சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த சட்னியை அரைக்கும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் இந்த சட்னி ருசியாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த சட்னியை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ½ கப் வேர்க்கடலை
- ¼ கப் பொட்டுக்கடலை
- 2 பூண்டு பல்
- 5 பச்சை மிளகாய்
- புளி (சின்ன நெல்லிக்காய் அளவு)
- ½ கப் துருவிய தேங்காய்
- தேவையான அளவு உப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கொத்து புதினா இலை
- சிறிதளவு கொத்தமல்லி இலை
- 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- ¼ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 வர மிளகாய்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, சிறிதளவு புதினா இலைகள் மற்றும் பூண்டு பல் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் புளியை சேர்த்து வதக்கவும்.
- இதை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பின்னர் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.
- இதை கிண்ணத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் கடுகை சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும் அதில் உளுந்தம் பருப்பை சேர்க்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும் அதில் கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான உடுப்பி தேங்காய் சட்னி ரெடி. இது இட்லி, தோசை, வடை என அனைத்திற்கும் சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.



Click it and Unblock the Notifications