Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
1/2 கப் பொட்டுக்கடலையுடன் இந்த 4 பொருளை சேர்த்து அரைச்சு தாளிச்சு விடுங்க.. இட்லி தோசைக்கு நல்லா இருக்கும்...
Udacha Kadalai Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலை வேளையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? இன்று இட்லி தோசைக்கு என்ன சட்னி செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றால் வீட்டில் பொட்டுக்கடலை அல்லது உடைச்ச கடலை இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் இந்த பொட்டுக்கடலை சட்னியை நன்கு நீர் போன்று செய்து, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை செய்வதற்கு 5 பொருட்கள் இருந்தாலே போதும்.

உங்களுக்கு பொட்டுக்கடலை அல்லது உடைச்ச கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடைச்ச கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 5
* பூண்டு - 5 பல்
* புளி - 1 துண்டு
* உடைச்சக்கடலை/பொட்டுக்கடலை - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய், புளி
சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின் அதில் உடைச்சக்கடலையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை போட்டு, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் நீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியை
சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான
உடைச்சக் கடலை சட்னி தயார்.
Image Courtesy: Vidhya's Vegetarian Kitchen



Click it and Unblock the Notifications