Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
துளசி இலை சட்னி ரெசிபி... இந்த மாதிரி அரைச்சு பாருங்க... ஆரோக்கியமும்,சுவையும் ஒண்ணா கிடைக்கும்...!
Tulsi Chutney Recipe in Tamil: இந்த பனிக்காலத்தில் பொதுவாகவே எளிதில் குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட துவங்கும். அதைக் கருத்தில் கொண்டு நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையிலும் சில பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். இந்த இந்த பொருட்களை பெரும்பாலும் நாம் சூப் அல்லது கஷாயமாக செய்து கொடுப்போம். அப்படி கொடுக்கும் போது குழந்தைகள் அதை நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
சளியை விரட்டும் உணவுகளை அவர்களுக்கே தெரியாமல் உணவில் கலந்து கொடுக்க மிகவும் சரியான வழி சட்னி தான். பெரும்பாலான வீடுகளில் இருக்கும் சளியை விரட்டும் பொருட்களில் முக்கியமானது துளசி இலை. எனவே துளசி இலையை சட்னியாக அரைத்துக் கொடுக்கும் போது குழந்தைகள் அதனை இட்லி அல்லது தோசை போன்றவற்றிலிருந்து வைத்து அவர்களுக்கே தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள். இது அவர்களை சளியாக ஏற்படும் பாதிப்புகள் இருந்து பாதுகாக்கும்.

உங்களுக்கு ஆரோக்கிய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துளசி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் துளசி இலைகள்
- 8 பல் பூண்டு
- 4 பச்சை மிளகாய்கள்
- 1 தக்காளி கழுவி
- 1 வெங்காயம் (சிறியது)
- 2 பாதாம் பருப்புகள்
- 1 தேக்கரண்டி தூள் உப்பு
செய்முறை:
- முதலில் 1 கப் துளசி இலைகளை எடுத்து சுத்தமான நீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு சுத்தமான மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் துளசி இலைகளை போடவேண்டும்.
- பின்னர், தோலுரிக்கப்பட்ட பூண்டை 8 முதல் 10 பற்களையும், இரு
துண்டுகளாக நறுக்கிய 4 பச்சை
மிளகாய்களையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
- அதன் பிறகு மிக்சியில் 2 முதல் 4 துண்டுகளாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும்.
- அதனுடன் சிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயங்களை சேர்க்க வேண்டும்.
- பிறகு, அதில் ஊறவைத்த 2 பாதம் துண்டுகளையும் சேர்க்க வேண்டும்.
- இவைற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த விழுதினை பதம் சிறிது திப்பி திப்பியாக இருக்க வேண்டும்.
- அரைத்த விழுதினை ஒரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். பிறகு, தாளிப்பு கரண்டியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் சிறிதளவு கடுகு, உடைத்த உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்க வேண்டும்.
- சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications