Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வீட்ல கத்திரிக்காய் இருக்கா? அப்ப இந்த கர்நாடகா ஸ்டைல் வாங்கி பாத் செய்யுங்க..பிரியாணிய விட சூப்பரா இருக்கும்!
Karnataka Style Vangi Bath Recipe in Tamil: சிலருக்கு கத்திரிக்காய் என்றாலே பிடிக்காது. சிலருக்கு கத்திரிக்காய் என்றால் மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கும். கத்தரிக்காயை வைத்து கார குழம்பு, சாம்பார் மற்றும் பொரியல் என விதவிதமாக சமைத்து சாப்பிடுவார்கள்.
சிலர் இதை வைத்து பஜ்ஜி, தொக்கு, மற்றும் வத்தல் போன்றவற்றை செய்வார்கள். ஆனால் உங்கள் மதிய உணவுக்கு கத்திரிக்காயை வைத்து இந்த கர்நாடக ஸ்பெஷல் வாங்கி பாத் செய்து பாருங்கள். இந்த சூப்பரான வாங்கி பாத் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- கத்திரிக்காய் - ¼ கிலோ
- வரமிளகாய் - 2
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- நெய் - தேவையான அளவு
அரைக்க:
- வரமிளகாய் - 8
- கடலை பருப்பு - 3 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன்
- கொத்தமல்லி விதைகள் - 2 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- பெருங்காய தூள் - ½ டீ ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 3
- இலவங்கப்பட்டை - 1
- புளி - சிறியது (சிறிய நெல்லிக்காய் அளவு)
- துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
- முதலில் அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரத்திற்கு வரை ஊற வைக்கவும்.
- அடுத்து கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- அரிசி ஊறியதும் சாதம் வேக வைக்க தேவையான தண்ணீர் சேர்த்து காய வைக்கவும்.
- தண்ணீர் சூடானதும் ஊற வைத்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் அதில் காய்ந்த மிளகாய், மல்லி விதைகள், சீரகம், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் புளியை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு நன்கு வறுக்கவும்.
- அதில் துருவி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பெருங்காயம் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் கறிவேப்பிலை, கடலை பருப்பு, மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- அதில் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், மற்றும் சிறிதளவு பெருங்காயம், சேர்த்து வேர்க்கடலை சற்று நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.
- நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி அதை இரண்டு நிமிடம் வேக விடவும்.
- பின் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- அதில் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு வேக விடவும். பின் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
- கடைசியாக நெய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கத்தரிக்காய் சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications