Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி திருவானந்தபுர ஸ்டைலில் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Trivandrum Chicken Recipe in Tamil: சிக்கன் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்பட கூடிய ஒன்று. ஞாயிறு கிழமை வந்தாலே மக்கள் சிக்கனை நோக்கிதான் ஓடுவார்கள். சிக்கனை நூற்றுக்கணக்கான வழிகளில் சுவையாக சமைக்கலாம்.
இதை வைத்து எத்தனை வகையான உணவுகள் சமைத்தாலும் அனைத்து உணவுகளுக்கும் ஏற்ற சிறந்த சைடிஷாக இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியான சுவையை சேர்த்து சமைக்கிறார்கள். சரி வாங்க திருவனந்தபுரம் சிக்கன் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- சிக்கன் - ½ கிலோ
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- இஞ்சி - சிறிதளவு (ஒரு விரல் அளவு)
- பூண்டு - 12 அல்லது 15 பல்
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லி தூள் - 1½ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- மிளகு தூள் - ½ டீ ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
- சிக்கன் துண்டுகளை தோல் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
- இரண்டு முறை தண்ணீர் சேர்த்து அலசி பின் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அலசி எடுத்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சியை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கவும்.
- அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
- கடைசியாக கரம் மசாலா சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் திருவனந்தபுரம் சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications