Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
1 கிலோ தக்காளி இருந்தா.. இப்படி செஞ்சு வெச்சுக்கோங்க.. 1 வாரமானாலும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது..
Thakkali Thokku Recipe In Tamil: தற்போது தக்காளியின் விலை குறைவாக உள்ளது. இப்படி தக்காளி விலை குறைவாக இருக்கும் போது, அந்த தக்காளியைக் கொண்டு ஒரு தொக்கு அல்லது ஊறுகாயை செய்து வைத்துக் கொண்டால், பல நாட்கள் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.
குறிப்பாக இப்படி செய்யும் தக்காளி தொக்கை இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். சொல்லப்போனால் இந்த ஒரு தக்காளி தொக்கு இருந்தால், எந்த சைடு டிஷ்ஷையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

உங்களுக்கு தக்காளி தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* தக்காளி - 1 கிலோ (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - பெரிய எலுமிச்சை அளவு
* மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 100 மிலி
* முழு பூண்டு - 2
வறுத்து பொடி செய்வதற்கு...
* கடுகு - 1 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயம் - சிறிது
தொக்கு செய்வதற்கு...
* நல்லெண்ணெய் - 200 மிலி
* கடுகு - 1 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* மிளகு - 10
* சீரகம் - 1 சிட்டிகை
* முழு பூண்டு - 3 (தட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் புளியை சிறிது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் தக்காளியை துண்டுகளாக்கி குக்கரில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, ஊற வைத்த புளியை பிசைந்து சாறு
எடுத்து, வடிகட்டி சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் நல்லெண்ணெயை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் 2 முழு பூண்டு எடுத்து, பூண்டு பற்களை தட்டி சேர்த்து
கிளறி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வெந்தயம்,
கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 200 மிலி எண்ணெயை ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள 3 முழு பூண்டின் பற்களை தட்டி
சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடி, மிளகாய் தூள், மஞ்சள்
தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, மத்து
பயன்படுத்தி தக்காளியை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின் மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நீர் ஓரளவு சுண்டும் வரை
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் தாளித்து வைத்துள்ளதை அப்படியே ஊற்றி கிளறி, 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு
தயார்.



Click it and Unblock the Notifications