Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
3 தக்காளியும், 1 வெங்காயமும் இருந்தா போதும்.. இட்லி தோசைக்கு டேஸ்டியான சைடு டிஷ் செய்யலாம்..
Tomato Salna Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபனுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியாமல் மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஒரு வெங்காயமும், 3 தக்காளியும் உள்ளதா?
அப்படியானால் அருமையான ருசியில் ஒரு தக்காளி சால்னாவை செய்யுங்கள். இந்த தக்காளி சால்னா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது 15 நிமிடத்தில் செய்யக்கூடிய அளவில் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு தக்காளி சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 1 பல்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புதினா - 10 இலைகள்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் -1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம்
ஆகியவற்றை சேர்த்து நன்க வறுத்து, இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து புதினா, துருவிய தேங்காய், கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்கு
ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு
சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள
விழுதையும் சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தக்காளி சால்னா தயார்.
Image Courtesy: foodofinterest



Click it and Unblock the Notifications