Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
2 தக்காளியும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
Tomato Potato Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் சிம்பிளாக, அதே சமயம் வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் எதிர்பார்க்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 2 தக்காளியும், 1 உருளைக்கிழங்கும் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இது சுட்டு செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும். அதுவும் இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி உருளைக்கிழங்கு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி உருளைக்கிழங்கு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 1
* தக்காளி - 2
* பூண்டு - 6-7 பல்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* தயிர் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை நெருப்பில் நன்கு சுட்டு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் தக்காளியை நன்கு சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பூண்டு பற்களை நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியின் தோலை நீக்கி உரித்துவிட
வேண்டும்.
* பின்னர் இடிகல்லில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு பற்களை நன்கு
இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே இடிகல்லில் சுட்ட தக்காளியை சேர்த்து நன்கு இடித்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், அதில் இடித்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, அத்துடன்
இடித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கிளறி, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், தக்காளி
உருளைக்கிழங்கு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications