Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஒருவாட்டி தக்காளி சட்னியை இந்த பக்குவத்துல செய்யுங்க.. எத்தனை தோசை சாப்பிட்டீங்கன்னு கணக்கே தெரியாது..
Tomato Mint Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் வழக்கம் போல இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு சற்று புளிப்பான அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி சட்னியை செய்யுங்கள்.
அதுவும் வழக்கம் போல செய்வது போன்று சட்னி செய்யாமல், அதன் ப்ளேவரை அதிகரிக்கும் வகையில் தக்காளி புதினா சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 5
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 10 பல்
* வெங்காயம் - 1
* தக்காளி - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், சீரகம், பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் இறுதியில் சிறிது புதினாவை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொற்ற வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி புதினா
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications