Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க ரசம் நல்லாவே இருக்காதா? அப்ப இந்த பக்குவத்துல செய்யுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க...
Thakkali Milagu Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் இருப்போருக்கு ரசம் ரொம்ப பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு ரசம் வெக்க தெரியாதா? நீங்கள் எப்படி ரசம் வைத்தாலும் அது சுவையாக இருக்காதா? அப்படியானால் ஒருமுறை தக்காளி மிளகு ரசத்தை செய்யுங்கள்.
இந்த ரசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அளவான பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியவாறு இருக்கும். இந்த பக்குவத்தில் ரசம் வைத்தால், நிச்சயம் உங்கள் ரசம் சுவையாக இருக்கும். இந்த ரசம் வழக்கமாக வைக்கும் ரசத்தை விட சத்தானது. ஏனெனில் இதில் புளி, பருப்பு என்று எதுவும் சேர்க்க தேவையில்லை.

உங்களுக்கு தக்காளி மிளகு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி மிளகு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த தக்காளி - 3
* தண்ணீர் - 3 கப்
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* பூண்டு- 4 பல்
* கொத்தமல்லி - 1/2 கையளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளியை எடுத்து, அதில் 2 டம்ளர்
நீரை ஊற்றி, கைகளால் நன்கு பிசைந்து விட்டு, தக்காளியின் தோலை எடுத்து
விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பிசைந்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, பெருங்காயத் தூள்
சேர்த்து கலந்து விட வேண்டும்.
* பின்பு இடி கல்லில் மிளகு, பூண்டு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை
சேர்த்து நன்கு இடித்து விட வேண்டும்.
* பிறகு இடித்ததை கொதித்துக் கொண்டிக்கும் தக்காளி ரசத்துடன்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நுரைக்க வரும் வரை கொதிக்க
வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தக்காளி மிளகு ரசம்
தயார்.



Click it and Unblock the Notifications