Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தக்காளி கெட்சப் பாஸ்தா!
பாஸ்தாவைக் கொண்டு பல வகையான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் ஒன்று தான் தக்காளி கெட்சப் பாஸ்தா. இந்த தக்காளி கெட்சப் பாஸ்தா மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஏற்ற ரெசிபி.
தற்போது இத்தாலியன் ரெசிபிக்கள் பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அதாவது பாஸ்தா ரெசிபிக்கள் அனைவராலும் விரும்பி உண்ணப்பட்டு வருகிறது. பாஸ்தாவில் பல வெரைட்டிகள் உள்ளன. அதாவது பல வடிவங்களில் பாஸ்தா கிடைக்கின்றன. இந்த பாஸ்தாவைக் கொண்டு பல வகையான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் ஒன்று தான் தக்காளி கெட்சப் பாஸ்தா. இந்த தக்காளி கெட்சப் பாஸ்தா மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஏற்றவாறு ஈஸியான செய்முறைக் கொண்டது.

முக்கியமாக இந்த தக்காளி கெட்சப் பாஸ்தாவானது பேச்சுலர்களும் செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும். உங்களுக்கு தக்காளி கெட்சப் பாஸ்தாரவ எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கெட்சப் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்தா - 1 கப்
* ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி கெட்சப் - 1/4 கப்
* ஆரிகனோ - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* பால் - 1/2 கப்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கெட்சப் சேர்த்து கிளற வேண்டும்.
* பின் அதில் ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பிறகு சோள மாவை பால் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வாணலியில் ஊற்றி கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான தக்காளி கெட்சப் பாஸ்தா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
