Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
ஹோட்டல் தக்காளி கார சட்னி ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Thakkali Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு ஒரு அற்புதமான சுவையில் சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் ஹோட்டலில் கொடுக்கப்படும் கார சட்னியை சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியானால் இன்று அந்த சட்னியையே வீட்டில் செய்யுங்கள்.
இந்த தக்காளி கார சட்னி ருசியாக இருப்பதன் ரகசியம், அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் காரணம். அது தான் புளி. பொதுவாக தக்காளியிலேயே புளிப்புச் சுவை இருக்கும். இருப்பினும் அதில் சிறிது புளி சேர்க்கும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த தக்காளி கார சட்னியை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், பின் அடிக்கடி செய்து தர சொல்வார்கள்.

உங்களுக்கு ஹோட்டல் தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* வரமிளகாய் - 8
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பெரிய தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு..
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நீர் ஊற்றாமல்
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை அதில் ஊற்றி, 3 நிமிடம் நன்கு கிளறி வேக
வைத்து இறக்கினால், சுவையான தக்காளி கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











