Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
எப்பவும் தக்காளி சாதம் செய்யாம.. ஒருடைம் தக்காளி கில்லி பிரியாணிய செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க..
Thakkali Gilli Biryani Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி வெரைட்டி சாதம் செய்வீர்களா? அதுவும் தக்காளி சாதத்தை அடிக்கடி செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை தக்காளி கில்லி பிரியாணியை செய்யுங்கள்.
இப்படி செய்யும் கில்லி பிரியாணியானது வழக்கமாக செய்யும் பிரியாணியை விட சற்று வித்தியாசமாக செய்யக்கூடியது. இப்படி ஒருமுறை தக்காளி கில்லி பிரியாணியை செய்தால், பின் அடிக்கடி இதை செய்வீர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த லன்ச்பாக்ஸ் ரெசிபியாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கில்லி பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கில்லி பிரிணாயி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரக சம்பா அரிசி - 2 கப் (கழுவி நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
வேக வைத்து அரைப்பதற்கு...
* பெரிய தக்காளி - 2
* பூண்டு - 7-8
* காஷ்மீரி வரமிளகாய் - 3-4
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 2
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* புதினா - 1 கைப்பிடி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3 1/2 கப்
செய்முறை:
* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் 2 பெரிய தக்காளி, 7-8
பல் பூண்டு, 3-4 காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, 2
நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, பொருட்களை எடுத்து ஒரு தட்டில்
வைத்து குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வேக வைத்த பொருட்களை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புதினாவை சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நீளவாக்கில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன்
பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி,
பின் பிரியாணி மசாலாவையும் சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட்டு வேக
வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் 3 1/2 கப் நீரை ஊற்றி, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், ஊற வைத்த சீரக சம்பா அரிசியை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து கிளறி, நீர் ஓரளவு சுட்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் ஓரளவு சுண்டியதும், குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து, 2
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான தக்காளி
கில்லி பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications











