Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தோசைக்கு தக்காளி சட்னியை ஒருடைம் இந்த 2 பொருளை சேர்த்து செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்...
Garlic Coriander Tomato Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை தான் செய்வீர்களா? அந்த தோசைக்கு அடிக்கடி தக்காளி சட்னி செய்வீர்களா? அப்படியானால் எப்பவும் ஒரே மாதிரியான ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் செய்யுங்கள்.
தக்காளி சட்னியிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒரு வெரைட்டியைத் தான் இன்று நாம் காணவுள்ளோம். இந்த தக்காளி சட்னியில் தக்காளியுடன் பூண்டு, கொத்தமல்லி போன்றவை சேர்க்கப்படுவதால், சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்+ 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 7 (நறுக்கியது)
* கொத்தமல்லி - 2 கைப்பிடி
* தக்காளி - 5 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப்பருப்பு சேர்த்து, லேசாக நிறம் மாறும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பச்சை மிளகாய்
வெள்ளையாகும் வரை வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில், கொத்தமல்லியை சேர்த்து இலை
சுருங்க வதக்கி, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப்பருப்பு, பூண்டு, பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய கொத்தமல்லி மற்றும் தக்காளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, லேசாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பூண்டு தக்காளி சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications