Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த தக்காளி பிரியாணியை செய்யுங்க.. டக்கரா இருக்கும்..
Tomato Biryani Recipe In Tamil: உங்களுக்கு மதிய வேளையில் நீண்ட நேரம் சமையலறையில் நின்று சமைக்க பிடிக்கவில்லையா? டக்கென்று சமையலை முடிக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி உள்ளதா? வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி என்றால் பிடிக்குமா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு பிரியாணி செய்யுங்கள்.
இந்த தக்காளி பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த தக்காளி பிரியாணி பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் மிகவும் ஈஸியாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இது ஒரு சிறந்த லன்ச்பாக்ஸ் ரெசிபியாகவும் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச் துண்டு
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 1
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* பாசுமதி அரிசி - 2 கப்
* தண்ணீர் - 4 கப்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவி, 4 கப் நீரை ஊற்றி,
15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், சோம்பு,
பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்
வரை நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை மட்டும் சேர்த்து, 1
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அந்த நீரையும் ஊற்றி கிளறி, நீர் கொதித்து ஓரளவு வற்றியதும்,
குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான தக்காளி பிரியாணி
தயார்.



Click it and Unblock the Notifications