Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
4 பிரட்டும், பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல பசங்களுக்கு இத செஞ்சு குடுங்க... விரும்பி சாப்பிடுவாங்க..
Toasted Custard Bread Pudding Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் மாலை வேளையில் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் வித்தியாசமான அதே சமயம் ருசியான ஒரு ஸ்வீட் செய்து கொடுக்க கேட்கிறார்களா?
உங்கள் பிள்ளைகளுக்கு புட்டிங் ரொம்ப பிடிக்குமா? உங்கள் வீட்டில் 4 பிரட் துண்டுகளும், 1/2 லிட்டர் பாலும் இருந்தால், அதைக் கொண்டு சூப்பரான புட்டிங் ரெசிபியை செய்யுங்கள். இந்த பிரட் புட்டிங்கை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் உங்கள் பிள்ளைகள் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். முக்கியமாக வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது, சட்டென்று ஒரு ஸ்வீட் செய்ய நினைத்தால், இந்த பிரட் புட்டிங்கை செய்து கொடுத்து அசத்துங்கள்.

உங்களுக்கு கஸ்டர்டு பிரட் புட்டிங் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கஸ்டர்டு பிரட் புட்டிங் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* வெண்ணெய் - 1 ஸ்பூன்
* பால் - 1/2 லிட்டர்
* சர்க்கரை - 1/4 கப்
* கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் - தேவையான அளவு (பொடியாக
நறுக்கியது)
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றின் முனைகளை
நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை சேர்த்து
உருகியதும், பிரட் துண்டுகளை சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக
ப்ரை செய்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, பால்
சூடானதும், அதில் 1/4 கப் சர்க்கரையை சேர்த்து கிளறி விட்டு கரைய
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கஸ்டர்டு பவுடரை சேர்த்து கலந்து,
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பாலானது சற்று கெட்டியானதும், அதை இறக்கி ப்ரை செய்து வைத்துள்ள
பிரட் துண்டுகளுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம், பிஸ்தா,
முந்திரியை தூவினால், சுவையான கஸ்டர்டு பிரட் புட்டிங் தயார்.



Click it and Unblock the Notifications