Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ஹோட்டல் டிபன் சாம்பார் சுவையின் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு நீங்களும் ட்ரை பண்ணுங்க...
Hotel Style Tiffin Sambar Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு நன்கு ஊற்றி குடிக்கும் அளவில் ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பார் இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
முக்கியமாக ஹோட்டல் சாம்பார் தனிசுவையை கொண்டிருக்க, அதில் சேர்க்கப்படும் ஒரு பொடி தான் முக்கிய காரணம். கீழே அந்த ரகசிய பொடி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தமுறை டிபனுக்கு சாம்பார் செய்வதாக இருந்தால், இந்த ஸ்டைல் சாம்பாரை செய்யுங்கள்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பார் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
வறுத்து பொடி செய்வதற்கு...
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 ( நறுக்கியது)
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 600 மிலி
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* அரைத்த பொடி - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, துவரம் பருப்பை எடுத்து,
நீரில் 2 முறை கழுவ வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, மிதமான தீயில்
வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம்,
வெந்தயம், வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கேரட், முருங்கைக்காய் சேர்த்து நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நறுக்கிய தக்காளியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சாம்பார் தூளை சேர்த்து கிளறி, நீரை ஊற்றி,
பெருங்காயத் தூள் சேர்த்து, சாம்பாரை கொதிக்க விட வேண்டும்.
* சாம்பார் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்த பருப்பை நன்கு
மசித்து சேர்த்து கிளறி, வெல்லத்தை சேர்த்து, உப்பு சுவை பார்த்து
வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 1 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அரைத்த பொடியை 2 டீஸ்பூன் சேர்த்து கிளறி, ஒரு கொதி
வந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி, நெய் சேர்த்து
கலந்தால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications