Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
2 கப் துவரம் பருப்பு இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இந்த மாதிரி கபாப் செஞ்சு சாப்பிடுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Thuvaram Paruppu Kebab Recipe In Tamil: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மழை பெய்யும் போது நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட ஆசையாக இருக்கும். அப்போது நிறைய பேர் தங்கள் வீடுகளில் பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து சாப்பிடுவார்கள். ஆனால் நீங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால், கபாப் செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் வீட்டில் 2 கப் துவரம் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் துவரம் பருப்பு கபாப் செய்யுங்கள். இந்த கபாப் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அருமையாக இருக்கும். அதோடு, இந்த கபாப் புரோட்டீன் அதிகம் நிறைந்தது என்பதால், சத்தானதும் கூட.

உங்களுக்கு துவரம் பருப்பு கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 2 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஊற வைத்த துவரம் பருப்பை நன்கு கழுவி, ஒரு
பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், 5 பூண்டு பற்கள், 3
பச்சை மிளகாய், உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 1 டீஸ்பூன் சில்லி
ப்ளேக்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சீரகத் தூள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் இவற்றை சேர்த்து, நன்கு கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை கொஞ்சமாக எடுத்து, உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி
சூடானதும், தட்டி வைத்துள்ள கபாப்பை சேர்த்து, முன்னும் பின்னும்
பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து
மாவையும் தட்டி போட்டு ப்ரை செய்து எடுத்தால், சுவையான துவரம் பருப்பு
கபாப் தயார்.



Click it and Unblock the Notifications