Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் தூதுவளை குழம்பு - எப்படி செய்றது-ன்னு தெரியுமா?
Thuthuvalai Kuzhambu Recipe In Tamil: குளிர்காலம் என்பதால் நிறைய பேர் சளி, இருமல் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் சளியை முறிக்கும் வகையிலான குழம்பை செய்து நல்ல சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, சளி எளிதில் முறிந்து வெளியேறும்.
அதுவும் சளியை முறிப்பதில் தூதுவளை கீரை மிகவும் சிறந்தது. இந்த தூதுவளை கீரையைக் கொண்டு இதுவரை ரசம் தான் செய்திருப்பீர்கள். ஆனால் தூதுவளை கொண்டு மிளகு சேர்த்து குழம்பு செய்து சாப்பிடும் போது, சளி விரைவில் முறியும். முக்கியமாக இந்த தூதுவளை குழம்பு செய்தால் 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு தூதுவளை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தூதுவளை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 10
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1 சில்லு (பொடியாக நறுக்கியது)
* தூதுவளை கீரை - 1 கைப்பிடி
குழம்பு செய்வதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 5
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 20 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, அதை சாறு எடுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மல்லி, வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் சிறிது நறுக்கிய தேங்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஒரு கைப்பிடி தூதுவளை கீரையை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்
* அதன் பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, 2 நிமிடம் நன்கு
வதக்க வேண்டும்.
* பின் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து, 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான தூதுவளை குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications