Latest Updates
-
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட
திருவாதிரை களியை குக்கரில் ஈஸியா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Thiruvathirai Kali Recipe In Tamil: மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாகும். இந்நாளில் சிவபெருமான் நடராஜர் வடிவில் காட்சியளித்ததால், அதை ஆருத்ரா தரிசனம் என்பர். இந்நாளில் சிதம்பரத்தில் உள்ள நடராசருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
அந்த வகையில் ஆருத்ரா தரிசனம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் தேதி வருகிறது. மேலும் இந்த நாளில் சிவபெருமானுக்கு திருவாதிரை களி செய்து படைத்து வழிபடுவது வழக்கம். இந்த திருவாதிரை களியை உங்கள் வீட்டிலும் செய்ய வேண்டுமா? அதுவும் மிகவும் சுலபமாக, குக்கரில் இந்த திருவாதிரை களியை செய்யலாம் என்பது தெரியுமா?

நீங்கள் ஆருத்ரா தரிசனத்தன்று திருவாதிரை களியை வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? கீழே திருவாதிரை களியை குக்கரில் எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பொடித்த வெல்லம் - 2 கப்
* தண்ணீர் - 1 கப் + 3 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* நெய் - 3 டீஸ்பூன்
* முந்திரி - 10
* ஏலக்காய் - 3
செய்முறை:
* முதலில் பச்சரிசியை முந்தைய நாளே நீரில் 2 முறை கழுவிவிட்டு,
பின் அதை ஒரு துணியில் போட்டு பரப்பில் உலர்த்தி எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும். அதேப் போல் பாசிப்பருப்பையும் 2 முறை கழுவி, உலர்த்தி
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மறுநாள் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில்
பச்சரிசியை சேர்த்து லேசாக நிறம் மாற வறுத்து இறக்கி ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து, அதையும் லேசாக நிறம்
மாற வறுத்து இறக்கி, பச்சரிசியுடன் சேர்த்து குளிர வைக்க
வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பச்சரிசி மற்றும் பருப்பை
சேர்த்து, ரவை பதத்திற்கு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் பொடித்த வெல்லத்தை போட்டு, அத்துடன்
1 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லத்தைக் கரைய விட்டு இறக்க
வேண்டும்.
* பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கரைத்த
வெல்லத்தை வடிகட்டி ஊற்றி, அத்துடன் 3 கப் தண்ணீர், 1 சிட்டிகை உப்பு
மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க வைக்க
வேண்டும்.
* வெல்ல நீரானது நன்கு கொதித்த பின், மிதமான தீயில் வைத்து அதில்
பொடித்து வைத்துள்ள அரிசி பருப்பு பொடியை சேர்த்து கட்டிகளின்றி நன்கு
கலந்து விட வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, மூடி வைத்து 2-3
நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். 6 நிமிடம் கழித்து மூடியை
திறந்து, களியை கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* பிறகு அதை குக்கரில் வைக்கும்படியான ஒரு பாத்திரத்தில் களியை போட
வேண்டும்.
* அதன் பின் குக்கரில் நீரை ஊற்றி, பின் களியை போட்டு வைத்துள்ள
பாத்திரத்தை வைத்து, தட்டு கொண்டு மூடி, பின் குக்கரை மூடி, குறைவான
தீயில் 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, களியை கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து வறுத்து, பின் வேக வைத்துள்ள
களியை சேர்த்து நன்கு கிளறி, பொடித்த ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி,
1 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான திருவாதிரை களி தயார்.



Click it and Unblock the Notifications
