Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தட்டுக்கடை முட்டை குழம்பு
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக தட்டுக்கடை முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
நீங்கள் முட்டை பிரியரா? முட்டையைக் கொண்டு பலவாறு செய்து சாப்பிட விரும்புபவரா? உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக தட்டுக்கடை முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டைக் குழம்பு சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தட்டுக்கடை முட்டை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டுக்கடை முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 4
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - 2 துண்டு
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* சிக்கன் ஸ்டாக் க்யூப் - 1
* முட்டை - 4-5 (வேக வைத்தது)
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, கல்பாசி, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக 2 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வேக வையுங்கள்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, சிறிது நீரை ஊற்றி, சிக்கன் ஸ்டாக் க்யூப் சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டி சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தட்டுக்கடை முட்டை குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications