Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
Thattu Kadai Pudina Thakkali Chutney Recipe In Tamil: இதுவரை இட்லி, தோசைக்கு எத்தனையோ ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் இந்த தட்டுக்கடை தக்காளி சட்னியை செய்துள்ளீர்களா? இந்த சட்னியின் ஸ்பெஷலே அதில் புதினாவை சேர்த்து செய்வது தான்.
அதுமட்டுமின்றி, அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இந்த சட்னியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் இந்த சட்னி ருசியாக இருக்கும்.

உங்களுக்கு தட்டுக்கடை புதினா தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* கறிவேப்பிலை - 2 கொத்து
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 துண்டு
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2
* உளுத்தம் பருப்பு - 1/2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 கைப்பிடி புதினா, 1/2 கைப்பிடி கொத்தமல்லி மற்றும்
2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஜாரில் நீரை ஊற்றி
அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தட்டுக்கடை
புதினா தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications