Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
20 நிமிடத்தில் சப்பாத்திக்கு ஒரு சுவையான சைடு டிஷ் செய்யணுமா? அப்ப தட்டைப்பயறு மசாலா செய்யுங்க..
Thattapayaru Masala Recipe In Tamil: இன்று இரவு சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரி குருமா மற்றும் மசாலாவை செய்து போரத்துவிட்டதா?
உங்கள் வீட்டில் தட்டைப்பயறு உள்ளதா? அப்படியானால் அந்த தட்டைப்பயறை ஒரு மணிநேரம் நீரில் ஊற வைத்து, அதைக் கொண்டு மசாலா செய்யுங்கள். இந்த தட்டைப்பயறு மசாலா சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தட்டைப்பயறு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டைப்பயறு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தட்டைப்பயறு - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கறி மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் தட்டைப்பயறை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தட்டிப் போட்டு, 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 1 நிமிடம் நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்,
கறி மசாலா தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் தட்டைப்பயறை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது தட்டைப்பயறை மட்டும்
எடுத்து மசித்து, குக்கரில் உள்ள மசாலாவுடன் சேர்த்து, மீண்டும்
குக்கரை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் சற்று
கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் கசூரி
மெத்தியை சேர்த்து கிளறினால், சுவையான தட்டைப்பயறு மசாலா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
