Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
1 கப் தட்டைப்பயிறு இருந்தா இந்த வடையை டக்குனு செய்யுங்க... மொறுமொறுனு சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்...!
Thatta Payaru Vadai Recipe in Tamil: தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். வடை எவ்வளவுதான் சுவையானதாக இருந்தாலும் அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே வடையை ஆரோக்கியமானதாக மாற்ற வேறு சில பொருட்களை வைத்து வடைகளைத் தயாரிக்கலாம். பொதுவாக வடையை உளுந்தம் பருப்பு அல்லது கடலைப்பருப்பு வைத்துதான் நாம் செய்வோம். ஆனால் வடையை ஆரோக்கியமானதாக மாற்ற வேறுசில சிறுதானியங்களை வைத்து மொறுமொறுப்பான வடையைத் தயாரிக்கலாம்.

உங்கள் வீட்டில் 1 கப் தட்டைப் பயிறும், பெரிய வெங்காயமும், வேறு சில மசாலா பொருட்களும் இருந்தால் போதும் வழக்கமான வடையை விட சூப்பரான சுவையில் மொறுமொறுப்பான வடையை செய்யலாம். தட்டைப்பயிறை வைத்து செய்யப்படுவதால் இந்த வடை ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு தட்டைப் பயிறை வைத்து சுவையான வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டைப் பயிறு வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- தட்டைப் பயறு - 1 கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- பூண்டு - 4 பற்கள்
- துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய் - 1
- காய்ந்த மிளகாய் - 2
- கிராம்பு - 1
- இலவங்கப்பட்டை - ¼ துண்டு
- சீரகம் - ½ ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய் பொரிக்க
செய்முறை:
- முதலில் தட்டைப் பயறை கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாக கழுவி விட்டு தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின் மிக்ஸி ஜாரில் தட்டைப் பயறு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு அந்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
பின்னர் அரைத்த மசாலா விழுது மற்றும் வெங்காய விழுதை அதில் சேர்த்து மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
- மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் போதுமான அளவு எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் ஒவ்வொரு வடையாக போட்டு இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் ஆகும் வரை பொரித்தெடுக்கவும்.
- பின்னர் உறிஞ்சும் தாளில் வைத்து எண்ணெயை வடித்து, டீ அல்லது
காபியுடன் சூடாகப் பரிமாறவும்.
-



Click it and Unblock the Notifications