Latest Updates
-
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம்
தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம்
ரசம் உடலுக்கு மிகவும் நல்லது. நீங்கள் ரசப் பிரியராக இருந்தால், வித்தியாசமான சுவையுடைய ரசங்களை செய்து சுவைக்க விரும்புபவராக இருந்தால், தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் செய்து சுவையுங்கள்.
ரசம் உடலுக்கு மிகவும் நல்லது. நீங்கள் ரசப் பிரியராக இருந்தால், வித்தியாசமான சுவையுடைய ரசங்களை செய்து சுவைக்க விரும்புபவராக இருந்தால், தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். மேலும் இந்த மசாலா ரசத்தை தக்காளி சூப் என்றும் கூறுவார்கள். ஏனெனில் இதை சூப் போன்றும் குடிக்கலாம்.

உங்களுக்கு இந்த தஞ்சாவூர் மசாலா ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபியின் எளிய செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 8-10
* தக்காளி - 2 (பெரியது)
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கிராம்பு - 5
* பட்டை - 1 இன்ச்
* அன்னாசிப்பூ - 2
* சோம்பு - சிறிது
செய்முறை:
* முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, தக்காளி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தக்காளியை மென்மையாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு அரைத்து, அதிலிருந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* இந்நிலையில் அரைத்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் தக்காளி வேக வைத்த நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5-6 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது கொத்தமல்லி மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications