Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
7 தக்காளியும், 1 வெங்காயமும் இருந்தா போதும்.. டேஸ்டியான தொக்கு செய்யலாம்.. இது இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்
Thakkali Vengaya Thokku Recipe In Tamil: காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? அந்த இட்லி தோசைக்கு சட்னி, சாம்பார் செய்து போரத்துவிட்டதா? அப்படியானால் தொக்கு செய்யுங்கள். அதுவும் தக்காளியும், வெங்காயமும் இருந்தால், செம டேஸ்டியா, கொஞ்சம் புளிப்பா, காரமா தொக்கு செய்யலாம்.
இந்த தக்காளி வெங்காய தொக்கு இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த தக்காளி வெங்காய தொக்கு அறைவெப்ப நிலையில் 3-4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரிட்ஜ்ஜில் என்றால் 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி வெங்காய தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வெங்காய தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி- 7-8 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10-12 பல்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இந்த நிலையில் தொக்கு சற்று நீராக இருக்கும். எனவே குறைவான தீயில்
வைத்து நீர் சுண்டும் வரை நன்கு கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிவது போல்
தெரிந்தால், அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது சுவையான தக்காளி
வெங்காய தொக்கு தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு காரம் பிடிக்குமானால், உங்கள் காரத்திற்கு தேவையான
அளவு மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.
* தொக்கு 2-3 நாட்கள் வரை நீடித்திருக்க வேண்டுமானால், எண்ணெயை
அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications