Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
இட்லிக்கு எப்பவும் ஒரே மாதிரி தக்காளி சட்னி அரைக்காம.. இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.
Tomato Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் டிபனா? அந்த இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லிக்கு பெரும்பாலும் தக்காளி சட்னி தான் பிடிக்குமா? அதை தான் எப்போதும் செய்து கொடுக்க சொல்வார்களா?
அப்படியானால் இட்லிக்கு எப்போதும் போன்று தக்காளி சட்னியை செய்யாமல், ஒருமுறை தக்காளி சாம்பாரை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். சொல்லப்போனால் ஒருமுறை இப்படி தக்காளி சாம்பார் செய்தால், பின் எப்போதும் இப்படி தான் செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* இஞ்சி - 2 சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* வெல்லம் - 1 சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கடலை மாவை சேர்த்து குறைவான தீயில் வைத்து, நன்கு
கிளறி விட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, தேவையான அளவு நீரை ஊற்றி, 5 நிமிடம் நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான தக்காளி சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications











