Latest Updates
-
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Thakkali Kuzhambu Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் டிபனாக செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் உங்கள் வீட்டில் சட்னி, சாம்பார் என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான, அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி குழம்பு செய்யுங்கள்.

இப்படி தக்காளி குழம்பை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக அடிக்கடி இந்த தக்காளி குழம்பை செய்ய சொல்லியும் கேட்பார்கள்.
உங்களுக்கு தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொடிப்பதற்கு..
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
குழம்பு தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* பூண்டு - 7 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 3-4 டீஸ்பூன்
* அரைத்த பொட்டுக்கடலை
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சீரகத்தை எடுத்துக்
கொண்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும்
கீறிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த பொட்டுக்கடலையை நீர் சேர்த்து கரைத்து ஊற்றி,
தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து
கிளறினால், சுவையான தக்காளி குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
