Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இட்லி, தோசைக்கு 10 நிமிஷத்துல இந்த தக்காளி குழம்பை செய்யுங்க.. வீட்டுல எல்லாம் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க
Tomato Kuzhambu Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? வீட்டில் தக்காளி உள்ளதா? அப்படியானால் இன்று தக்காளியைக் கொண்டு குழம்பு செய்யுங்கள்.
இந்த தக்காளி குழம்பு இட்லி, தோசைக்கு பிரமாதமாக இருக்கும். மேலும் இப்படி குழம்பு செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக வீட்டில் உள்ளோர் சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த தக்காளி குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 4 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை -1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரை எடுத்து, அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம்,
பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சாம்பார் தூள்,
மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய்
சேர்த்து, 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி ஒரு
பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீதமுள்ள தக்காளி போன்ற பொருட்களை மத்து கொண்டு கடையலாம்
அல்லது மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளலாம்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்தோ அல்லது கடைந்தோ வைத்துள்ள தக்காளியை சேர்த்து,
அத்துடன் வடிகட்டி வைத்துள்ள தக்காளி நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் 1 டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து கலந்து, நன்கு 10 நிமிடம்
கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தக்காளி
குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications