Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
அடிக்கடி தக்காளி சட்னி செய்வீங்களா? ஒருடைம் இந்த ஸ்டைலில் ட்ரை பண்ணுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Thakkali Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசைக்கு அடிக்கடி தக்காளி சட்னியை செய்வீர்களா? எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் தக்காளி சட்னி செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து உங்களுக்கு போரடித்துவிட்டதா?
அப்படியானால் ஒருமுறை தக்காளி சட்னியை பூண்டு தட்டிப் போட்டு செய்யுங்கள். இந்த தக்காளி கார சட்னி தோசை, இட்லியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னியை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 5 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை நறுக்கி சேர்த்து, அத்துடன்
சிறிது புளியை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பூண்டு பற்களை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, 5-7
நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி கார
சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications