Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப சாதத்துக்கு இந்த தக்காளி கடலைப்பருப்பு கூட்டு செய்யுங்க.. அள்ளும்..
Tomato Dal Kootu Recipe In Tamil: மதிய வேளையில் டக்கென்று சமையலை முடிக்க வேண்டுமா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் கடலைப் பருப்பும், தக்காளியும் இருந்தால், அருமையான சுவையில் கூட்டு செய்யலாம்.
இந்த தக்காளி கடலைப்பருப்பு கூட்டு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். பேச்சுலர்கள் கூட வேகமாக சமையலை முடிக்க இந்த சமையலை செய்யலாம். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கடலைப்பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கடலைப்பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு - 100 கிராம்
* தேங்காய் - 2 சில்லு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
கூட்டு செய்வதற்கு...
* எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் ஊறு வைத்த கடலைப்பருப்பை கழுவி சேர்த்து, அதில்
சிறிது நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு
இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்
தூள சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் துளை சேர்த்து குறைவான தீயில் வைத்து
1 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை நீருடன் அப்படியே சேர்த்து
கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி,
உப்பு சுவை பார்த்து, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து
இறக்கி, பாதி கடலைப்பருப்பை மசித்து விட்டு, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான தக்காளி கடலைப்பருப்பு கூட்டு தயார்.
Image Courtesy: Apoorvaa's Virundu



Click it and Unblock the Notifications











