Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
2 தக்காளியும், 1 இன்ச் இஞ்சியும் இருந்தா இந்த சூப்பரான சட்னியை செய்யுங்க... அட்டகாசமான சைடிஷா இருக்கும்...!
Tomato Ginger Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னியுடன் தக்காளி சட்னியை சேர்த்து சாப்பிடும்போது அதனால் கிடைக்கும் அனுபவமே தனி. காலைப்பொழுதை மகிழ்ச்சியாகத் தொடங்க இதுவே சிறந்த வழி.
தக்காளி சட்னியை பொதுவாக ஒரே மாதிரிதான் அரைப்போம். தக்காளி சட்னியின் பொதுவான மூலப்பொருள் தக்காளியாக இருந்தாலும், அதனுடன் சேர்க்கும் மற்ற பொருட்கள்தான் அதற்கு சுவையைக் கொடுக்கிறது. தக்காளி சட்னி அரைக்கும் போது அதனுடன் சில குறிப்பிட்ட பொருளை சேர்த்து அரைத்தால் அதன் சுவை வித்தியாசமாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். அதில் முக்கியமான ஒரு பொருள்தான் இஞ்சி.

உங்களுக்கு தக்காளி இஞ்சி சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் தக்காளி இஞ்சி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
செய்முறை:
வதக்க வேண்டியவை:
- பழுத்த தக்காளி - 2
- பெரிய வெங்காயம் - 1
- வர மிளகாய் - 5
- புளி - ஒரு சிறிய ஸ்பூன்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு:
- இஞ்சி - 1/2 இன்ச்
- கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிக்க:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
செய்முறை:
- தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும். பின்னர் புளியைச் சேர்த்து நன்கு வதக்கி பின்னர்ஆற விடவும்.
- இந்த கலவை ஆறிய பிறகு, இஞ்சி மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வேறு சுவைக்காக நீங்கள் வெங்காயத்தைச் சேர்க்காமல், தாளிப்பை மட்டும் செய்யலாம்.
- பின்னர் இந்த கலவையில் சட்னியை கொட்டி சில நிமிடங்கள் வதக்கவும். சட்னி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான தக்காளி இஞ்சி சட்னி ரெடி. இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications