Latest Updates
-
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்!
ஒருமுறை தக்காளி சட்னியை இப்படி செஞ்சு பாருங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கில்லாம இட்லி, தோசை சாப்பிடுவாங்க...
Tomato Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு சட்னி தான் சரியான காம்பினேஷனாக இருக்கும். சட்னியில் பல வெரைட்டிகள் இருந்தாலும், தக்காளி சட்னியே பெரும்பாலானோரின் விருப்பமான சட்னியாக இருக்கும். அப்படிப்பட்ட தக்காளி சட்னியையே பலவாறு சமைக்கலாம். இந்த தக்காளி சட்னியுடன் ஒவ்வொரு பொருளை கூடுதலாக சேர்க்கும் போது அதன் சுவையில் வித்தியாசம் ஏற்படுகிறது.
அந்த வகையில் இன்று நாம் ஒருவிதமான தக்காளி சட்னியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த தக்காளி சட்னி செய்வதற்கு 4-5 பொருட்களே போதுமானது. ஆனால் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வதக்க வேண்டும். இப்படி தனித்தனியாக வதக்கும் போது, சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். இப்படி ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 15 பல்
* தக்காளி - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்து ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே எண்ணெயில் தோலுரித்த 20 சின்ன வெங்காயம் மற்றும் 15 பல்
பூண்டு சேர்த்து, நிறம் மொறும் வரை வதக்க வேண்டும். வெங்காயின் நிறம்
மாறியதும், அதை வரமிளகாயுடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் இரண்டாக வெட்டிய 5 தக்காளியை எடுத்து,
தக்காளியின் வெட்டிய பகுதி பேனில் படும்படி வைத்து 10 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* பின் திருப்பிப் போட்டு, 3-4 நிமிடம் வேக வைத்து ஒரு தட்டில்
எடுத்துக் கொண்டு குளிர வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு குளிர்ந்த பின் அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு
சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியுடன் நல்லெண்ணெயை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து
கிளறினால், சுவையான தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











